பள்ளி ஒன்றுகூடல்
பிற்போடப்பட்ட கடந்த தவணைக்குரிய இறுதி ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் இந்த ஞாயிற்றுக்கிழமை (25.07.2021), பள்ளி நேரத்தில், வகுப்பறை A3 இல் (A கட்டடம், தரைத்தளம், பின்புறம்) நடைபெறவுள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
கீழே தரப்பட்டுள்ளவாறு தவணை இறுதி ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் இரண்டு அமர்வுகளாக நடைபெறும்.
அமர்வு 1
ஆண்டு 4 முதல் ஆண்டு 12 வரை
பிற்பகல் 2:15 முதல் 3:15 மணி வரை
கம்பன் 2, அகத்தியர் 1, கபிலர் மற்றும் பாவேந்தர் மாணவர்களின் நிகழ்ச்சிகள்
அமர்வு 2
பாலர் முதல் ஆண்டு 3 வரை
மாலை 3:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை
பாரதியார் 3, ஔவையார் 1 மற்றும் இளங்கோ 1 மாணவர்களின் நிகழ்ச்சிகள்
பெற்றோர்களையும் பாதுகாவலர்களையும் இவ் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில் (அவர்களிற்கு பொருத்தமான அமர்வு) கலந்துகொண்டு மாணவர்களின் செயல்திறனைக் கண்டுகளித்து அவர்களை ஊக்குவிக்குமாறு தயவாய் வேண்டிக்கொள்கிறோம்.
உங்கள் ஆதரவு மற்றும் அன்பான ஒத்துழைப்புக்கு நன்றி.
தெற்கு தமிழ்ப்பள்ளி நிர்வாகம்
|