போட்டிகளில் பங்குபற்றுவதற்கான பொது விதிமுறை
2022 இல் ஒரு போட்டியில் மாநிலப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெற்றிபெறுபவர்களுக்கு , 2023 இல் மாநிலங்களில் நடைபெறும் அதே போட்டியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் வழங்கப்படமாட்டாது. இவ்விதி அடுத்த வருடத்திலிருந்து (2023 இலிருந்து) நடைமுறைப் படுத்தப்படும்.
விசேட கவிதை மனனம் (திருக்குறள்), விசேட கவிதை மனனம் (ஆத்திசூடி) மற்றும் கவிதை மனனப் போட்டிகள் ஒவ்வொன்றும் தனித்தனிப் போட்டிகளாக எடுத்துக் கொள்ளப்படும்.
உதாரணம்: மாநிலப் போட்டியில் மத்திய பிரிவிற்கான விசேட கவிதை மனனப் போட்டியில் இந்த வருடம் முதலிடம் பெறுபவர்கள், அடுத்த வருடம் அதி மேற்பிரிவில் விசேட கவிதை மனனப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களுக்கான எந்தப் பரிசிற்கும் போட்டியிட முடியும்.
|