பதிவுகள்
Registrations
தமிழ்மொழி – தொண்டராசிரியர்
எமது தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழிப் பாட தொண்டராசிரியராக சேவையாற்ற விருப்பமுடையோரிடமிருந்து ஆர்வ வெளிப்பாட்டு பதிவு கோரப்படுகின்றது. பின்வரும் தகமைகள் இருப்பது விரும்பத்தக்கது;
- ஆசிரியப்பணியில் முன்னனுபவம்.
- தமிழ் மொழியில் கல்வி நிலை தேர்ச்சி.
- தமிழ் மொழி சார்ந்த பங்களிப்பு (உதாரணம்: இலக்கிய படைப்பு, கதை கவிதை, மற்றும் பேச்சுப் போட் டிகளில் பங்கேற்பு)
- மாணவர் மனநிலை அறிந்து சேவையாற்றும் வல்லமை.
- அத்தோடு அனைத்து தமிழ்ப்பள்ளி நாட்களிலும் ஒழுங்காக வருகை தரக்கூடியதாயிருத்தல் மிகவும் நன்று.
விண்ணப்பிக்க விருப்புடையோர் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்துவதன் மூலம் ஆசிரியர் பதிவுப் பத்திரத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பு: இத்தொண்டராசிரியர் பணியானது முற்று முழுதும் சேவை அடிப்படையிலானதே.